அதிகாரியிடம் விடுப்பு கடிதம் வழங்கிய ஊராட்சி செயலாளர்கள்
சென்னையில் 15-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம்: அதிகாரியிடம் விடுப்பு கடிதம் வழங்கிய ஊராட்சி செயலாளர்கள்
சிக்கல்:
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் வருகிற 15-ந் தேதி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. பணி விதிகள் அடங்கிய அரசாணை வெளியிடக்கோரி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி மாநில அளவில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஈடுபட உள்ளனர். இந்தநிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் 32 ஊராட்சி செயலாளர்கள் வருகிற 15-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள ஊராட்சி செயலாளர்கள் சங்க கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் கேசவன், செயலாளர் கணேஷ்குமார், பொருளாளர் செல்லதுரை, மாவட்ட அமைப்பு செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் சங்கர் உள்பட நிர்வாகிகள் விடுப்பு கடிதத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் முத்துக்குமரனிடம் வழங்கினர்.