ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

Update: 2023-08-24 18:43 GMT

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை இயக்கும் பலர் நிரந்தர வேலையில்லாமல், ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மாத ஊதியத்துடன் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தற்காலிக ஊழியர்களாகவே 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு இதுநாள் வரை சம்பள உயர்வோ, உரிய சலுகைகளோ கிடைக்கவில்லை. அவர்களின் ஊதியத்தை முற ைப்படுத்தியும், வேலையை நிரந்தரமாகவும் தமிழக அரசு வழங்கவேண்டும்.

மேலும் தமிழகத்தில் மொத்தம் 12,524 ஊராட்சிகள் உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் இடங்கள் காலியாக உள்ளது. இதனால் ஊராட்சியின் வளர்ச்சிப்பணியும், மக்கள் பணியும் பெரும் தொய்வு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டியை இயக்குபவர்களின் பணியை நிரந்தரம் செய்தும், அவர்களின் மாத ஊதியத்தை உயர்த்தியும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்