ஊராட்சி செயலாளர்கள் ஊதியம் இல்லா தற்செயல் விடுப்பு கடிதம்

ஊராட்சி செயலாளர்கள் ஊதியம் இல்லா தற்செயல் விடுப்பு கடிதம் கொடுத்தனர்

Update: 2022-09-09 18:14 GMT

தொட்டியம், செப்.10-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பணிச்சுமையை குறைக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களின் பணி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 12, 13, 14-ந்தேதிகளில் போராட்டம் நடத்த உள்ளனர் இதையொட்டி மேற்கண்ட 3 நாட்கள் தற்செயல் ஊதியம் இல்லா விடுப்பு போராட்ட கடிதத்தை தொட்டியம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மருததுரையிடம் வழங்கினர். இதற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை ஊராட்சி செயலாளர்கள் சங்க திருச்சி மாவட்ட பொருளாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். தொட்டியம் ஊராட்சி செயலாளர்கள் சங்க துணைத்தலைவர் அன்பழகன், செயலாளர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்