ஊராட்சி செயலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-25 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயவேல். இவர் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பியவர் வீட்டுக்கு செல்லாமல் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ஏரிக்கரை அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் கவிச்செல்வன், பழனி, மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் மகேஸ்வரன் கண்டன உரையாற்றினார். ஊராட்சி செயலாளர் ஜெயவேலுவின் தற்கொலைக்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், மாநில இளைஞரணி செயலாளர்கள் சக்திவேல், நேரு மற்றும் நிர்வாகிகள் சிவ சூரியன், செல்லதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்