ஊராட்சி மன்ற அலுவலக பூட்டை உடைத்து கம்ப்யூட்டர், நாற்காலி திருட்டு

அரக்கோணம் அருகேஊராட்சி மன்ற அலுவலக பூட்டை உடைத்து கம்ப்யூட்டர், நாற்காலியை திருடிச்சென்று விட்டனர்.;

Update: 2022-12-01 18:17 GMT

அரக்கோணத்தை அடுத்த சித்தூர் ஊராட்சி மன்ற அலுவலக்த்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர், ஊராட்சி மன்ற தலைவரின் நாற்காலி மற்றும் 15 பிளாஸ்டிக் நாற்காலி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அலுவலத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துனர். மேலும், இது குறித்து தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டு, விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்