ஊராட்சி மன்ற தலைவர் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு

ஊராட்சி மன்ற தலைவர் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-03 19:46 GMT

ராமநத்தம், 

வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி மகன் கருணாநிதி (வயது 43). கழுதூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது காரை கழுதூர் ஸ்டேட் வங்கி முன்பு நிறுத்திவிட்டு சென்றார். பின்னா் திரும்பி வந்து பார்த்தபோது அவரது காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 1 லட்சத்து 57 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்