ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்-ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை

ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என ஊராட்சி உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-05-04 18:45 GMT

சிவகங்கை மாவட்ட ஊராட்சி உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் கூறியதாவது:- ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அரசு தரப்பில் கொண்டு வர வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு மாத ஊதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும். மற்ற அரசு பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில சங்கத்தின் மூலம் வருகிற 15-ந் தேதி முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 350 பேர் கலந்து கொள்வது என்று சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்