ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநாடு

ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநாடு நடந்தது.

Update: 2022-08-31 16:53 GMT

கரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் திருஞானசம்பந்தம் வரவேற்றார். இதில் 1-.1.-2022 முதல் 30.-6.-2022 வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். குடும்ப நல நிதி உதவித்தொகை ரூ.50 ஆயிரத்தை 2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல அனைத்து கிரேடு ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் கருனைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், கவுரவ தலைவர் பரமேஸ்வரன் மற்றும் மாநில தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்