ஊராட்சி மன்ற தலைவர் மீது பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்குதல்

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய பெட்ரோல் பங்க் ஊழியரை தேடி வருகின்றனர்.

Update: 2023-07-03 18:38 GMT

வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிவேல் செல்வம். இவர் தனது மோட்டார்சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக தும்பேரி கூட்ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அங்கு பெட்ரோல் போடும் போது பணியில் இருந்த ஊழியர் குருபிரசாத் என்வருக்கும், ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிவேல் செல்வத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பெட்ரோல் போட்டுகொண்டு சென்ற ஊராட்சி மன்ற தலைவரை அந்த ஊழியர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திமடைந்த வெற்றிவேல் செல்வம் அவரை அடிக்க பாய்ந்துள்ளர். பதிலுக்கு அந்த ஊழியர், தலைவர் வெற்றிவேல் செல்வத்தை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் காயம் அடைந்த செல்வம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அம்பலூர் போலிசார் இரு தரப்பினர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய பெட்ரோல் பங்க் ஊழியர் குரு பிரசாத்தை தேடி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் ஊழியர் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்