ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொள்ள முடிவு

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் கலந்து கொள்ள முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-10 19:16 GMT

சிவகாசி, 

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் கலந்து கொள்ள முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம்

தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சிவகாசி ஒன்றிய கூட்டமைப்பின் கிளை கூட்டம் நேற்று ஆனையூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் உசிலை செல்வம் தலைமை தாங்கினார்.

மாநில உயர்நிலைக்குழு பிரதிநிதியும், கூட்டமைப்பின் துணைத்தலைவருமான தேவராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் நிறைமதி ராஜமுனியாண்டி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டம்

இதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 14-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி ஒன்றியத்தில் உள்ள 54 பஞ்சாயத்து தலைவர்களும் கலந்து கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விஸ்வநத்தம் சக்திவேல்நாகராஜ், செங்கமலநாச்சியார் புரம் கருப்பசாமி, ஆலமரத்துப்பட்டி ஜோதி லட்சுமி, மேலாமத்தூர் விஜயா, ஒருங்கிணைப்பாளர் கோமதி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதுக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்