பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம்
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் தைப்பூச திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் சுவாமி வீதி உலாவும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
9-ம் திருநாளான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று (சனிக்கிழமை) தீர்த்தவாரியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முருகன், கீழ கோவிலிருந்து மலைக் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்னக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும், பிரியா விடைபெறுதலும் நடைபெறும்.