பான்பராக், புகையிலை பொருட்கள் பறிமுதல்

வாணியம்பாடியில் பான்பராக், புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-05-31 12:15 GMT

ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில், சுகாதாரத்துறை, வருவாய்துறை, காவல் துறை மற்றும் வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் இணைந்து உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்கு வைத்திருந்த பான்பராக் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் உள்ள புகையிலை சம்மந்தப்பட்ட விளம்பரங்களை அப்புறப்படுத்தவும், புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சங்கர், மண்டல துணை தாசில்தார் விமல் மோகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், சரவணன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், போலீசார், சுகாதார ஆய்வாளர்கள், வாணியம்பாடி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்