பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம்
பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
நெமிலி
பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையால் பேரூராட்சியில் கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். சாலை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.