மத்திய அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம்

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் பா.ஜ.க.வினர் வீடு. வீடாக சென்று வினியோகம்;

Update: 2022-11-13 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத்திட்டங்களின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று வழங்க வேண்டும் என்ற கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார். அதன் பேரில் பா.ஜ.க. மாநில கூட்டுறவு பிரிவு துணை தலைவர் ஏ.ர.வேலு, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று மத்திய அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். கட்சியினரை கிராமமக்கள் தேநீர் கொடுத்து உபசரித்தனர். அப்போது பிறமொழி மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து, ஒன்றிய பொதுச்செயலாளர் மூர்த்தி, துணை தலைவர் சிவபாலன், செயலாளர் மோகன்ராஜ், கிளை தலைவர்கள் ராமராஜன், கருணாகரன், மாதவன் மற்றும் பா.ஜ.க.வினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்