ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்குவதும் இயல்பு நிலைக்கு திரும்புவதும் நடைபெற்று வருகின்றது. இதனிடையே நேற்று சின்னப்பாலம் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்ட காட்சி. மதியத்திற்கு பிறகு மீண்டும் கடல் நீர் ஏறி இயல்பு நிலைக்கு திரும்பியது.