பனை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் பனை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட பனை, தென்னை மர நாடார் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பதநீர் மற்றும் தென்னை மரத்திலிருந்து இறக்கப்படும் தென்னம்பால் என்கிற தெலுவு ஆகியவை விற்பனை செய்ய கடந்த 25 நாட்களாக போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் தொழிலாளர்களை சட்டவிரோதமாக கள்ளச்சாராய வழக்கில் கைது செய்துள்ளதை கண்டித்தும், பதநீர், தெலுவு விற்பனை செய்ய அனுமதி வழங்கக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். இதில் தொழிலாளர் அணி தலைவர் மூர்த்தி, மகளிர் அணி செல்வி, முருகன், செல்வம், முருகேசன், ராஜா, முருகன், ஜெயந்தி, சந்திரா, ராணிவடமலை, பழனிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.