பனைத்தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சுரண்டை அருகே பனைத்தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-07-26 12:49 GMT

சுரண்டை:

இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் ஆலோசனையின்படி, தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வேலப்பநாடானூரில் பனைத்தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன் தலைமை தாங்கினார். பனைத் தொழிலாளர்கள் அணியின் மேலநீலிதநல்லூர் ஒன்றிய தலைவர் ஜோதி மாரியப்பன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்துநாடார் கலந்து கொண்டு அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் கூறும்போது, தமிழக அரசு பனை வாரியத்தின் மூலம் மாவட்டம் தோறும் பனை பொருள் விற்பனை அங்காடியை தொடங்க வேண்டும். பதநீர், கருப்பட்டி ஆகிய பொருட்கள் விற்பதற்கு ஏற்கனவே இருந்த லைசென்ஸ் முறையை ரத்து செய்து, பனைவாரிய அடையாள அட்டை மட்டுமே போதுமானது என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வேலப்பநாடானூர் கிளை தலைவர் ராஜன், துணைத் தலைவர் வேல்முருகன், செயலாளர் சந்தனகுமார், துணை செயலாளர் மற்றும் பனைத்தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்