ஊருணி கரையோரத்தில் பனை விதைகள் நடும் விழா

தேனி அருேக ஊருணி கரையோரத்தில் பனை விதைகள் நடும் விழா நடந்தது.

Update: 2022-09-04 17:00 GMT

தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பலர் குழுவாக ஒருங்கிணைந்து கடந்த 3 ஆண்டுகளாக பனை விதை நடவு, மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் களப்பணிகள் போன்றவற்றை செய்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான கண்மாய், ஊருணிகள் கரையோரங்களில் பனை விதைகள் நடவு செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்ட தன்னார்வலர் குழு சார்பில் 4-வது ஆண்டு பனை விதைகள் நடும் விழா தேனி அருகே கொடுவிலார்பட்டி மந்தை ஊருணியில்  நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பனை விதைகள் நடவு பணியை தொடங்கி வைத்தார்.


இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, உதவி பொறியாளர் சோனா, வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யப்பன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜமோகன், பாசங்கா நிறுவன நிர்வாக இயக்குனர் செந்தில் நாராயணன், கவுமாரியம்மன் உணவு நிறுவன நிர்வாக இயக்குனர் சுதாகர், தேனி ரூரல் அப்ளிமெண்ட் அறக்கட்டளை தலைவர் யாசர் அராபத் ஆகியோர் கலந்துகொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.


நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி, ஊராட்சி செயலாளர் வேல்முருகன், தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டு ஊருணி கரையில் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.





Tags:    

மேலும் செய்திகள்