ஊசூர் வட்டாரத்தில் பனைவிதை நடும் விழா

ஊசூர் வட்டாரத்தில் பனைவிதை நடும் விழா நடந்தது.

Update: 2022-09-24 16:40 GMT

அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டத்தில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பனை விதைகள் நட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் பனைவிதை நடும் முகாமில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளிகள் ஈடுபட்டனர்.

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள சேக்கனூர், பூதூர், ஊசூர் மற்றும் தெள்ளூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் வேலூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பனை விதைகளை நட்டனர்.

விழாவுக்கு வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதாஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரிகாசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, ராஜன்பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாலதிசுரேஷ்பாபு, விஜயகுமாரி கண்ணன், கவிதாசிவகுமார், தேவிசுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் பெருமாள் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி கலந்து கொண்டு, பனை விதை நடவுவதை தொடங்கி வைத்தார்.‌

இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேஷ், செயற்பொறியாளர் செந்தில்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், பிரபாகரன், ஊராட்சி செயலாளர்கள் நந்தகுமார், முகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைபோல் அடுக்கம்பாறை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

துணை தலைவர் தொன்போஸ்கோ, ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கணேசன் வரவேற்றார். இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பனை விதைகள் நட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்