வந்தவாசி
நிலத்தடி நீரை பாதுகாப்பதில் பனைமரங்களுக்கு முக்கிய இடமுண்டு.
பனைமரத்தின் அவசியத்தை உணர்ந்த வந்தவாசி அருகே உள்ள மாலையிட்டான்குப்பம் கிராம இளைஞர்கள் அந்த கிராம ஏரியில் 5 ஆயிரம் பனை விதைகளை நடுவது என முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதையடுத்து இன்று 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியில் பனை விதைகளை நடும் பணியை தொடங்கினர்.
அப்போது விதை நடும் பணியை பார்க்க வந்த கிராம மக்களுக்கு பணங்கற்கண்டு, பனைவெல்லம் ஆகியவற்றை கொடுத்து அவர்கள் வரவேற்றனர்.