பாமாயில் விலை குறைந்தது

விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்து காணப்பட்டது.

Update: 2022-06-26 19:10 GMT

விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்து காணப்பட்டது.

உளுந்து

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடை ரூ.8,300 முதல் ரூ.9,500 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,200 முதல் ரூ.11,200 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.8,100 முதல் ரூ.9,600 வரையிலும் விற்பனை ஆனது.

பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,500 முதல் ரூ.11,900 வரையிலும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,500 வரையிலும் விற்பனையானது. துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு ரூ.10,700 முதல் ரூ.11,600 வரையிலும் விற்பனையானது.

மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ.5,200 முதல் ரூ. 5,300 வரையிலும், மல்லி நாடுரகம் ரூ.4,900 முதல் ரூ.5,200 வரை விற்பனையானது.

வத்தல்

முண்டுவத்தல் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ.17 ஆயிரம் முதல் ரூ.25 வரையும் விற்பனையானது.

கடலை எண்ணெய் 15 லிட்டர் ரூ.50 குறைந்து ரூ.2,850 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.166 உயர்ந்து ரூ.4,868 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.130 விலை குறைந்து ரூ. 2,260 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7,000 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4 ஆயிரம் ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோ ரூ.20 விலை உயர்ந்து ரூ.3,820 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.4,200 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

பட்டாணி

பொரிகடலை விலை ரூ.3,750 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.4 ஆயிரம் ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,110 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,020 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1,180 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.910 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும் விற்பனை ஆனது. பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனை ஆனது.

மசூர் பருப்பு ரூ.10,100 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பி ரகம் 50 கிலோ ரூ. 17,500 ஆகவும், ஏ ரகம் ரூ.18 ஆயிரம் ஆகவும், சி ரகம் ரூ.15,500 ஆகவும், ரோபஸ்டா ஏ ரகம் ரூ.8 ஆயிரமாகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.11 ஆயிரமாகவும் விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்