பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில்சிறார்களுக்கு மது, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை:குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் சிறார்களுக்கு மது, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2023-04-11 18:45 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு முதல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவரும், குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் குழுவின் செயலாளர், உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், போலீஸ் கண்காணிப்பு பணிகளை அதிகரிக்கவும் வேண்டும். 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை உபயோகிக்க சில இடங்களில் கூடுவதால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுவிற்பனை செய்யக்கூடாது என்பது தொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுப்பது. பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடை செய்வதோடு, போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

செல்போன், இணையதள பயன்பாடு மூலம் குழந்தைகள் மனச்சிதைவு ஏற்படுவதை தடுக்க ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஒரு வார காலம் இணையவழி பயன்பாடு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவிப்பு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆயோருக்கு நன்றி தெரிவித்தும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் 2 முறை விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் சிறார்களுக்கு மது, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்