பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழா

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் சித்திரை திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2023-04-19 19:00 GMT

சித்திரை திருவிழா

பழனி முருகன் கோவிலின் உபகோவிலான லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பழனி மேற்கு ரதவீதியில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலில் பெருமாளின் மடியில் லட்சுமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது சிறப்பாகும். மேலும் கோவிலில் ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, சித்திரை திருவிழா போன்ற விழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 26-ந்தேதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருக்கல்யாணம்

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெறுகிறது. மேலும் காலை, மாலையில் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரச்சப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவில் 7-ம் திருநாளான அடுத்த மாதம் (ேம) 2-ந்தேதி மாலை 7.30 மணிக்கு லட்சுமி, நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து மே 4-ந் தேதி காலை 5.30 மணிக்கு தேரேற்றம், காலை 7.35 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினசரி மாலை 6 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இன்னிசை, நாட்டிய, நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்