வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரம்

ஆண்டு திருவிழா அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குவதையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-07-24 18:45 GMT

வேளாங்கண்ணி:

ஆண்டு திருவிழா அடுத்த மாதம் 29-ந்தேதி தொடங்குவதையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பேராலயத்தின்எதிரே வங்கக்கடல் உள்ளதால் வேளாங்கண்ணி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இந்த பேராலயம் கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.

ஆண்டு திருவிழா

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதிஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேராலயத்தின் முகப்பு பகுதியில் மரக்கட்டைகள் மூலம் சாரம் அமைத்து தொழிலாளர்கள் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்