இரும்பு தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணி

இரும்பு தடுப்புகளுக்கு வர்ணம் பூசும் பணி;

Update: 2023-08-03 19:30 GMT

கிணத்துக்கடவு

கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரங்களில் மழைநீர் வடிகால் அருகே இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்புகளில் மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் நிறம் மாறி இரும்பு தடுப்புகள் இருப்பதே தெரியாத நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை காணப்பட்டது. இந்த நிலையில் கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள இரும்பு கம்பிகளில் மஞ்சள் நிற வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் ஒத்தக்கால்மண்டபம், கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம், ஆச்சிப்பட்டி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்