வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா
வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.;
விருதுநகர் அருகே ஆமத்தூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தார். விழாவில் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் அழகருக்கு இங்கிருந்து சாமியாடிகள் திரியை ஏற்றி ஊரை வலம் வந்து பின் மதுரைக்கு சென்று பல வருடங்களாக நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்த ஆண்டும் அழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்த சாமியாடிகள் திரியை ஏற்றி ஊரினை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்த மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.