'எனது வாக்கு எனது உரிமை' குறித்த ஓவியப்போட்டி

‘எனது வாக்கு எனது உரிமை' குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது.

Update: 2022-10-13 19:21 GMT

அன்னவாசல்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி எனது வாக்கு எனது உரிமை ஒரு வாக்கின் சக்தி என்ற கருவினை மையமாக கொண்டு விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் தாலுகா அளவிலான ஓவியப்போட்டி இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியினை இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி தொடங்கி வைத்தார். இதில் திரளான மாணவிகள் கலந்துகொண்டு ஓவியங்கள் வரைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்