திண்டுக்கல்லில் லாரி மோதி பெயிண்டரின் கை துண்டானது

திண்டுக்கல்லில் லாரி மோதி பெயிண்டரின் கை துண்டானது.

Update: 2023-04-23 16:50 GMT

திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் சிவராமச்சந்திரன் (வயது 33). பெயிண்டர். நேற்று மாலை இவர், தனது மோட்டார் சைக்கிளில் நாகல்நகரில் இருந்து பேகம்பூருக்கு சென்றுகொண்டிருந்தார். மக்கான் தெரு அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த செப்டிக் டேங்க் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவராமச்சந்திரன் சாலையில் விழுந்தார். அப்போது செப்டிக் டாங் லாரி, அவருடைய வலது கையில் ஏறி இறங்கியது. இதில் அவருடைய கை துண்டானது. வலியால் அலறித்துடித்த சிவராமச்சந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்