நீலாங்கரையில் பெயிண்டர் குத்திக்கொலை - நண்பர்கள் கைது
நீலாங்கரையில் பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரா (வயது 29). பெயிண்டரான இவர், நேற்று இரவு நீலாங்கரையில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்கள் 4 பேருடன் அமர்ந்து மது அருந்தினார்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ராகவேந்திரா 4 பேரை தாக்கி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து ராகவேந்திராவை கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் நீலாங்கரை போலீசார் மடக்கி பிடித்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் எதற்காக ராகவேந்திராவை கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் மண்டல் (27). இவர் வேளச்சேரி வி.ஜி.பி., செல்வா நகரில் நடக்கும் கட்டிட கட்டுமான நிறுவனத்தில் கொத்தனாராக பணி புரிந்து வந்தார். கடந்த மாதம் 27-ந்் தேதி நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த பெருங்குடி, கல்லுக்குட்டைய சேர்ந்த 5 சிறுவர்கள் மீது மோதினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வடமாநில வாலிபர்கள், சிறுவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று உள்ளனர்.
பின்னர் 5 சிறுவர்களும் கல்லுக்குட்டைக்கு சென்று வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறி 4 பேரை அழைத்து வந்தனர். மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ரமேஷ் மண்டல் பலத்த காயம் அடைந்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வேளச்சேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (20), கோகுல் (19) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 7 சிறுவர்களை கைது செய்தனர்.