திருப்பரங்குன்றம்
வாடிப்பட்டி அருகே உள்ள திருவாழவாயநல்லூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 27).பெயிண்டர். இவர் அவரது உறவினர் ஆறுமுகத்துடன் பெயிண்டிங் வேலைக்காக தன் ஊரில் இருந்து மதுரை விமான நிலையப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் நான்குவழிச்சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் முனுசாமி, ஆறுமுகம் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக முனுசாமி இறந்துபோனார். படுகாயமடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து வந்து முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.