ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பலி

திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பலியானார்.

Update: 2023-05-22 19:00 GMT

திண்டுக்கல் ஆர்.எம். காலனி அருகே ரெயில் தண்டவாள பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பழனி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர், திண்டுக்கல் மருதாணிகுளம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் வேல்முருகன் (வயது 30) என்பதும், கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற இன்டர்சிட்டி ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்