போடியில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் பலி

போடியில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் பலியானார்.

Update: 2023-05-27 21:00 GMT

போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 53). பெயிண்டர். நேற்று முன்தினம் இவர், போடி அம்மாகுளம் நகராட்சி பூங்கா அருகே உள்ள அமீர் என்பவரது வீட்டில் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வீட்டின் ஜன்னல் வழியாக சென்ற மின்கம்பியை காளிதாஸ் தெரியாமல் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காளிதாசின் மனைவி சங்கரேஸ்வரி (48) போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வீட்டின் உரிமையாளர் அமீர் (62) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்