கொரடாச்சேரி அம்மையப்பன் ஊராட்சி ஆனைவடபாதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது55). பெயிண்டரான இவர் நேற்று கொரடாச்சேரி அருகில் உள்ள முகுந்தனூரில் ஒருவரது வீட்டில் பெயிண்டிங் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த மின்வயரில் இருந்து மின்சாரம் தாக்கி நமச்சிவாயம் தூக்கி வீசப்பட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நமச்சிவாயம் இறந்தார். இதுகுறித்து நமச்சிவாயம் மனைவி தேவி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.