பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
பெயிண்டர்
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு கிராமம் தேனாச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது32). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மீனா என்ற மனைவியும், ரோகித் (1½) மகனும் உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக்குமார் மீனாவை தாக்கினாராம். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் மீனா கணவரிடம் கோபித்துக்ெகாண்டு, மண்ணச்சநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தற்கொலை
இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன விரக்தியில் இருந்த கார்த்திக்குமார் நேற்று முன்தினம் மாலையில் மதுஅருந்திக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கெலை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று காலையில் கார்த்திக்குமார் வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவைத் தட்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்ததில் கார்த்திக்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உருக்கமான கடிதம்
அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கார்த்திக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், கார்த்திக்குமார் மனைவிக்கு எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், `எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். மகனை நன்கு படிக்க வைக்க வேண்டும். இது எனக்கு கடைசி நிமிடம், உங்க அப்பா, அம்மாவை ரொம்ப பிடிக்கும்' என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றிய சோமரசம்பேட்டை போலீசார், இது அவருடைய கையெழுத்து தானா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.