பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை
பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட்டை அடுத்த மூணாங்கரடு முருகன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 35), பெயிண்டர். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றும் குடும்ப பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது திடீரென குமார் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.