35 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

நன்னிலம் அருகே 35 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயரிழந்தார்.

Update: 2023-04-15 19:00 GMT

நன்னிலம்;

நன்னிலம் அருகே 35 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயரிழந்தார். அரசு விடுதி கட்டிடத்துக்கு பெயிண்டு அடித்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ெதாழிலாளி

நாமக்கல் மாவட்டம் குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 42). இவர், பெயிண்டிங் வேலை செய்யும் கூலித்ெதாழிலாளியாவார்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மூலமங்கலம் பகுதியில் கல்லூரி மாணவிகளுக்கான ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி கட்டும் பணியில் பெயிண்டு அடிக்கும் பணியில் வடிவேலு ஈடுபட்டு வந்தார்.

தவறி விழுந்து சாவு

நேற்று காலை வடிவேலு மற்றும் தொழிலாளர்கள் அரசு மாணவர் விடுதி கட்டிடத்தில் சுமார் 35 அடி உயரத்தில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது வடிவேலு திடீரென கால் தவறி கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த வடிவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வடிவேலு உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.உயிரிழந்த வடிவேலுவுக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

---------

Tags:    

மேலும் செய்திகள்