தண்ணீர் தொட்டியில் விழுந்த பெயிண்டர் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த பெயிண்டர் பலியானார்.

Update: 2023-07-02 19:44 GMT

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து சக்கரவர்த்தி (வயது 45). பெயிண்டரான இவர் பணியை முடித்து விட்டு மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சைக்கிளில் மீனாட்சிபுரத்திற்கு வந்து கொண்டு இருந்தார். அப்பகுதியில் தாமிரபரணி உபரி நீர் வெளியேறும் தண்ணீர் தொட்டி உள்ளது. வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த முத்து சக்கரவர்த்தி தண்ணீர் குடிக்க அந்த தொட்டிக்கு சென்றார். பின்னர் அவர் தலை குனிந்து தொட்டியில் தண்ணீர் குடிக்க முயற்சித்த போது தடுமாறி தொட்டியில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள வால்வில் இவரது மூக்கு அடிப்பட்டதால் ரத்தகாயத்துடன் தொட்டியில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முத்துசக்கரவர்த்தியின் உடலை மீட்டனர். இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்