டெக்ஸ்டைல்ஸ் நிறுவன மினிபஸ் மோதி பெயிண்டர் பலி

டெக்ஸ்டைல்ஸ் நிறுவன மினிபஸ் மோதி பெயிண்டர் பலியானார்.

Update: 2022-07-22 18:28 GMT

நொய்யல் அருகே குந்தாணிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). பெயிண்டர். இவர் புன்னம் சத்திரம் பகுதியில் இருந்து உப்புபாளையம் பிரிவு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கரூரில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான மினி பஸ் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்து முருகேசன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து முருகேசன் மனைவி கவுரி கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ், விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் டிரைவர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி போலீஸ் நிலையம் வீதி பகுதியை சேர்ந்த மதுரைவீரன் மீது வழக்குப்பதிந்து, அந்த மினி பஸ்சையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்