ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை

பேட்டை அருகே ரெயில் முன் பாய்ந்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-06-20 00:27 IST

பேட்டை:

நெல்லையை அடுத்த பட்டன்கல்லூர், வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவருடைய மகன் முருகன் (வயது 38). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை தாம்பரத்தில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டை செல்லும் ெரயில் முன் பாய்ந்து முருகன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார், நெலலை சந்திப்பு ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியதாஸ் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்