விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை
திருமங்கலம் அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து ெகாண்டார்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள காங்கேய நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 36).பெயிண்டர். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 7-ந் தேதி மாணிக்கம் விஷம் குடித்து விட்டார்.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிந்துபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.