குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெயிண்டர் தற்கொலை

தக்கலை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-20 17:56 GMT

தக்கலை:

தக்கலை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெயிண்டர்

தக்கலை அருகே உள்ள குழிக்கோடு செருக்குத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 47), பெயிண்டரான இவருடைய மனைவி பிரிதாகுமாரி (43). இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ராஜேஷ்குமார் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணிக்கு பிரிதா வெளியே சென்று விட்டு மீண்டும் 11.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் படுக்கை அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

தற்கொலை

வெகுநேரமாக கதவை தட்டியும் ராஜேஷ்குமாரிடம் இருந்து பதில் வராததால் பிரிதாகுமாரி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜேஷ்குமார் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்