பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரருக்கு விருது

சேரன்மாதேவி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரருக்கு விருது வழங்கப்பட்டது.

Update: 2023-07-18 20:58 GMT

சேரன்மாதேவி:

தென்காசியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. இதில் வாழ்நாள் சாதனையாளர் விருது சேரன்மாதேவி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக வீரர் சிவராமலிங்கரவிக்கு வழங்கப்பட்டது. அதனை நெல்லை மாவட்ட வலுதூக்கும் சங்க புரவலர் வளர்மதி முத்தையா மற்றும் தென்காசி மாவட்ட ஆணழகன் சங்க தலைவர் கோமதிநாயகம், செயலாளர் குத்தாலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, சங்க செயலாளர் நாகராஜன், பொருளாளர் ரவிக்குமார், நெல்லை மாவட்ட ஆணழகன் சங்க செயலாளர் கல்லத்தியான் என்ற கண்ணன், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழக செயலாளர் தளவாய் மூர்த்தி, பொருளாளர் சரவணகுமார், நெல்லை மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் சண்முகசுந்தரம், இணைச் செயலர் உதயகுமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்