கொள்முதல் நிலையத்தில்தேங்கி கிடக்கும் நெல்மணிகள்

கந்தர்வகோட்டை அருகே நெல்கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் தேங்கி கிடக்கிறது. உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-29 18:53 GMT

நெல் கொள்முதல் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே பருக்கை விடுதி கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு விவசாயத்தின் மூலம்ஆண்டுதோறும் நெல் நடவு செய்து அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

ஆனால் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் எடை போடுவதற்கு ஆள் வரவில்லை என்றும், கோணி பைகள் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி விவசாயிகள் கொண்டு வந்த நெல் மணிகளை எடைபோடாமல், அங்கேயே குவியலாக, குவித்து வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை

தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் நெல்மணிகள் மழையில் நனைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் இரவு பகலாக நெல்லை பாதுகாப்பதற்கு நெல் கொள்முதல் நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

மேலும் மழையில் நனைந்த நெல்மணிகள் அதிக ஈரப்பதம் இருப்பதாக கூறி விலை குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது. பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்