செய்யாறில் மழையால் நெற்பயிர்கள் சேதம்

செய்யாறு பகுதியில் கோடை மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன.

Update: 2023-05-07 15:57 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா வாழ்குடை மற்றும் முக்கூர் பகுதியில் ஏரி பாசனத்தின் கீழ் விவசாயிகள் ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டனர். இந்த நிலையில் கோடை மழைக்கு முன்னரே 75 சதவீதம் வரை நெல் அறுவடை செய்த நிலையில் எஞ்சிய நெற்பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையால் தாழ்வான நிலங்களில் நீர் தேங்கி விவசாய நிலத்திலேயே நெற்பயிர்கள் முளைத்து சேதமடைந்தது. சுமார் 100 ஏக்கருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண் மற்றும் கால்நடை துறையினர் ஆய்வு செய்து தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கை அனுப்பி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாழ்குடை பகுதியில் நெற்களங்களில் நெல் மூட்டைகள் அதிகளவு தேக்கமடைவதால் இப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்