மழையில் நனையும் நெல் மூட்டைகள்
நார்த்தாம்பூண்டி கிராமத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நார்த்தாம்பூண்டி கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.