"நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை" - சபாநாயகர் அப்பாவு
“நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லை:
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
உலகம் இருக்கும் வரையில் தமிழக மக்களுக்காக கருணாநிதி செய்த பணிகள் பேசப்படும். நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் சென்னை கடற்கரையில் அண்ணாவின் அருகில் கலைஞர் துயில் கொள்ளும் நினைவகம் போன்று மாதிரி நினைவகம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தை, வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை கலெக்டர் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும். இவ்வாறு அவர் கூறினார்.