வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர் படுகாயம்

சத்திரப்பட்டி அருகே வாகனம் மோதி பாதயாத்திரை பக்தர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-12-21 16:29 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 45). கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், தனது ஊரில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். நேற்று காலை உதயகுமார், திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் திண்டுக்கல்-பழனி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக உதயகுமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தூக்கிவீசப்பட்ட உதயகுமார் படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த உதயகுமாரை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்