பாம்பாறு அணை இலங்கை தமிழர் முகாமில்ரூ.1.95 கோடியில் 36 தொகுப்பு வீடுகள்முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
பாம்பாறு அணை இலங்கை தமிழர் முகாமில் ரூ.1 கோடியே 95 லட்சத்தில் 36 தொகுப்பு மற்றும் ஒரு தனி வீட்டை காணொலி காட்சி மூலமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஊத்தங்கரை
பாம்பாறு அணை இலங்கை தமிழர் முகாமில் ரூ.1 கோடியே 95 லட்சத்தில் 36 தொகுப்பு மற்றும் ஒரு தனி வீட்டை காணொலி காட்சி மூலமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை இலங்கை தமிழர் முகாமில் ரூ.1 கோடியே 95 லட்சத்தில் 36 தொகுப்பு மற்றும் ஒரு தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் சரயு பாம்பாறு அணை இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்களுக்கு வீடுகளுக்கான ஆணைகள் மற்றும் வீட்டு சாவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சரயு பேசியதாவது:-
ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை இலங்கை தமிழர்களுக்கு 36 தொகுப்பு வீடுகளும், 1 தனி வீடும் புதிய வீடுகள் கட்டுவதற்கு அரசு உத்தரவிட்ட்டது. அதன் பேரில், பாம்பாறு அணை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட ரூ.1.95 கோடியில் 36 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் 1 தனி வீடும் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்துள்ளார். பயனாளிகள் இந்த வீடுகளை பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடிப்படை வசதிகள்
தொடர்ந்து கலெக்டர் பாம்பாறு அணை இலங்கை தமிழர்களுக்கு புதிதாக கட்டுப்பட்டுள்ள குடியிருப்பில் கலெக்டர் குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து முகாமில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், உதவி கலெக்டர் பாபு, ஒன்றியக்குழு தலைவர் உஷாராணிகுமரேசன் பேரூராட்சி தலைவர் அமானுல்லா, தாசில்தார் திருமலைராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினிசெல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்தியவாணிராஜா, சின்னத்தாய், மணிகண்டன், கலீல், முருகேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.