பா.ஜனதா மாவட்ட செயலாளர் கைது

உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால் பா.ஜனதா மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-25 19:30 GMT

பா.ஜனதா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பர்கூரை அடுத்த பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 52). இவர், தனது முகநூல் பக்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் முருகேசனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்