கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு, பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள், மரக்கன்றுகள் நடுதல் துண்டு பிரசுரம் வினியோகம், மஞ்சப்பை விழிப்புணர்வு ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் ரவி, வனத்துறை அலுவலர் புவனா ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினர். மேலும் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சப்பைகளை வழங்கினார்கள். இதில் ஆசிரியர்கள் ரமணி, நாகராணி, உடற்கல்வி இயக்குனர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராகவன், பெரியசாமி, கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் மற்றும் தேசிய பசுமை படை மாணவர்கள் செய்திருந்தனர்.